Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமெரிக்கன் அகாடமி ஆப் நியூராலஜியின் கவுரமிக்க உறுப்பினர் டாக்டர் அலீம்…

திருச்சி  கி.ஆ,பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி  முன்னாள் துணை முதல்வரும்,  நரம்பியல்  நிபுணருமான  டாக்டர் எம்.ஏ. அலீம்,  அமெரிக்கன் அகாடமி  ஆப் நியூராலஜியின் கவுரவமிக்க  உறுப்பினராக  நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த பொறுப்புக்கு  தெற்கு , மத்திய தமிழ்நாட்டில் இருந்து  டாக்டர் எம்.ஏ. அலீம் தான் முதன் முதலாக நியமிக்கப்படுகிறார்.   நரம்பியல் துறையில் டாக்டர் அலீமின்  சிறப்பான பங்களிப்பை  அங்கீகரிக்கும் வகையில் இந்த  மதிப்புமிக்க பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது  டாக்டர் எம்.ஏ. அலீம்  தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரியின் நரம்பியல்துறை பேராசிரியராகவும்,  திருச்சி ஏபிசி மருத்துவமனை நரம்பியல் மருத்துவராகவும்,  பணியாற்றுகிறார்.  ஏற்கனவே டாக்டர் அலீம், இந்தியன் அகாடமி  ஆப் நியூராலஜி மற்றும்  இங்கிலாந்தில் உள்ள ராயல்  மருத்துவ கல்லூரி மதிப்புமிக்க உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!