Skip to content

கேரளா….கிறிஸ்துமஸ் மது விற்பனை…. 3 நாளில் ரூ.154 கோடி…..

கேரளாவில் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உட்பட பண்டிகை நாட்களில் மது விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ்பண்டிகையையொட்டி மது விற்பனை குறித்து கேரள மதுபான கழகம் (பெவ்கோ) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கேரளா முழுவதும் மதுபான சில்லறை கடைகள் மூலம் கிறிஸ்துமசுக்கு முந்தைய 3 தினங்களில் (22,23,24) ரூ.154 கோடியே 78 லட்சத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ரூ.144 கோடியே 91 லட்சத்திற்கு விற்பனையாகி இருந்தது. இந்த ஆண்டு 22, 23 ஆகிய 2 நாட்களில் ரூ.80 கோடியே 4 லட்சத்திற்கும், 24-ந் தேதி ரூ.70 கோடியே 74 லட்சத்திற்கும் மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது. சில்லறை விற்பனை கடைகளில் அதிகபட்சமாக,சாலக்குடியில் உள்ள ஒரு கடையில் மட்டும் ரூ.63 லட்சத்து 85 ஆயிரத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!