Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் பலி..

தெற்கு பெய்ரூட் புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாசின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதாக லெபனானின் ஹிஸ்புல்லா குழு தெரி ஹிஸ்புல்லா குழு தெரிவித்துள்ளது. ஹமாசின் ராணுவப் பிரிவை நிறுவியவர்களில் சலே அரூரியும் ஒருவர். சலே அல்-அரூரியைக் கொன்றதை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும் உறுதிபடுத்தியுள்ளது. முன்னதாக மேற்குக் கரையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்குவதற்கு முன்பே இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. லெபனான் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம், இந்த குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், லெபனான் தலைநகரின் தெற்கு புறநகர்ப் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து இஸ்ரேலிய டிரோன் ஒன்று வெடித்து சிதறியதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!