Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காரைக்கால் கார்னிவெல்…. நடிகை ஆன்ட்ரியாவின் இசைகச்சேரி…

பொங்கல் திருநாளையொட்டி  காரைக்கால் மாவட்ட நிர்வாகமும்,  சுற்றுலாத்துறையும் இணைந்து  காரைக்கால் கார்னிவெல் விழாவை 4 நாட்கள் விமரிசையாக நடத்தியது. கடந்த 14ம் தேதி  பட்டிமன்றம் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது.  2ம் நாள் மாரத்தான் ஓட்டம், விளையாட்டு போட்டிகள், மற்றும் கைலநிகழ்ச்சிகள் நடந்தது. 3ம் நாள் படகு போட்டி நடந்தது.

நிறைவு விழாவான நேற்று மாலை  6 மணிக்கு  நடிகை ஆன்ட்ரியாவின்  இசை நிகழ்ச்சி நடந்தது.  மற்றும் சின்னத்திரை கலைஞர்களின்   நடனம்,  நகைச்சுவை நிகழ்ச்சிகளும் நடந்தது.  இதில்  புதுவை முதல்வர்

ரெங்கசாமி கலந்து கொண்டு நடிகை ஆன்ட்ரியா உள்பட  கலைஞர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.  கார்னிவெல் விழாவையொட்டி  உணவுத்திருவிழா, மலர்க்கண்காட்சி,  பட்டம் விடுதல்  போன்ற   நிகழ்ச்சிகளும் நடந்தது. மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 3 எம்எல்ஏக்கள்  குதிரை வண்டியில் வருகை புரிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!