Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவர்னர் ரவியை கண்டித்து, மயிலாடுதுறையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு என்று சொல்லாமலும் தலைவர்களது பெயரை உச்சரிக்காமலும் கவர்னர் உரை ஆற்றியது சட்டமன்ற கூட்டத் தொடரில் பாதியிலேயே கவர்னர் திரும்பி சென்றது ஆகிய செயல்களைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆன்றோர்கள் பேரவை, மொழி போராட்ட தியாகிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்  இன்று மயிலாடுதுறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கம் மற்றும் வழக்கறிஞர்கள்ஒன்றிணைந்து தமிழக கவர்னர் ரவியை  கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.  கவர்னர் ரவியே திரும்பிபோ, ஆர் என் ரவியே திரும்பி போ என முழக்கமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!