தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டுப்போட்டி நடந்தது. இதில் காளை முட்டி தள்ளியதில் ஒரு காளையின் உரிமையாளரான பவுன்ராஜ்(49) பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் இன்று இறந்தார். இது குறித்து வல்லம் போலீசார் விசாரணை நடத்தினர். பலியான பவுன்ராஜ் புதுக்கோட்டை மாவட்டம் மஞ்சப்பேட்டை என்ற கிராமத்தை சேர்ந்தவர்.
திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு காளை முட்டி….. ஒருவர் பலி
