Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயங்கொண்டம்…. சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

கடலூர் மாவட்டம், சாக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் ராஜூ(21). கூலி தொழிலாளியான இவர் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள முத்துச்சேர்வாமடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பமானார். இதையறிந்த பெற்றோர் சிறுமியை திட்டி கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சிறுமி மண்ணெண்ணெயை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுவதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிறுமி கர்ப்பத்துக்கு காரணமான ராஜூ, இவருக்கு உடைந்தையாக இருந்த பெற்றோர் சீனிவாசன்,ஜெயராணி ஆகியோர் மீது ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப் பதிந்தது ராஜுவின் தந்தை சினிவாசனை கடந்த 16 ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜூவை போலிசார் தேடி வந்த நிலையில் போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த ராஜுவின் தாயார் ஜெயராணி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!