Skip to content

விண்வெளி செல்லும் 4 இந்திய வீரர்கள்….. பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்

திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று நடந்த  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர்   பல திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்கள் 4 பேரும் பங்கேற்றனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:

குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர்,  அஜித் கிருஷ்ணன்,  அங்கத் பிரதாப், சுபான்சு  சுக்லா.   மேற்கண்ட 4 வீரர்களுடன்  பிரதமர் மோடி கைகுலுக்கி அவர்களுடன் உரையாடி, இவர்கள் 4 பேரும்  வெண்வெளிக்கு செல்ல உள்ள இந்திய வீரர்கள் என அறிமுகப்படுத்தினார். இவர்கள்  கடந்த 6 வருடங்களாக ரஷ்யாவில்  விண்வெளி பயணத்துக்கான பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  4 வீரர்களுக்கும்  விண்வெளி பயணத்துக்கான  மிஷன் லோகோவை பிரதமர் வழங்கினார். இவர்கள் விண்வெளியில் 3 நாள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.

இந்த விழாவில் பேசிய பி்ரதமர்  மோடி, விண்வெளியில் இந்தியாவின் புதிய சகாப்தம் தொடங்கி உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!