Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

72 பேர் பலியான நேபாள விமான விபத்து…கருப்பு பெட்டி மீட்பு

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்று காலை 10.33 மணிக்கு ‘எட்டி ஏர்லைன்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணம் செய்தனர். அந்த விமானம் காலை 11 மணிக்கு பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. பொக்காரா புதிய விமான நிலையம் கடந்த 1-ந்தேதி தான் திறந்து வைக்கப்பட்டது.விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானத்தில் திடீரென்று தொழில்.நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது பழைய விமான நிலையத்துக்கும், புதிய விமான நிலையத்துக்கும் இடையே உள்ள சேட்டி நதிக்கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது.  இதில் 72 பேரும் பலியாகி விட்டனர்.

இந்த விபத்தை தொடர்ந்து பொக்காரா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விமானங்கள் புறப்பாடு, வருகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு விமான பயணத்தை அதில் பயணம் செய்த சிலர் பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளனர். அதில் விமானம் விபத்தில் சிக்குவதும், விமானம் தீப்பிடிக்கும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

விபத்துக்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டி தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச மற்றும் தேசிய மலை வழிகாட்டிகள் குழு தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கருப்பு பெட்டியை மீட்டது. கருப்பு பெட்டி ஆய்வுக்காக காத்மாண்டு எடுத்துச்செல்லப்படுகிறது. ஆய்வுக்குப் பிறகு விமான விபத்துக்கான காரணம் தெரிய வரும் என்று நம்பப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!