Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மக்களவை தேர்தல்… பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு நிகழ்ச்சி..

கரூரில் மக்களவை தேர்தலை ஒட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினர் 130க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் மக்களவை தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் துப்பாக்கி ஏந்திய துணை

ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு பேரணியில் கலந்துக்கொண்டு, பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை வழியுறுத்தி பேரணி நடைபெற்றது.

இதில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதிவிரைவு படை காவல்துறையினர், துணை ராணுவப்படை என 130க்கும் மேலானோர் கலந்துக்கொண்டனர். தேர்தல் கொடி அணிவகுப்பு, சௌந்தரபுரம் பகுதியில் இருந்து பள்ளப்பட்டி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!