Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் திமுக பிரமுகர் வீடுகளில் விடிய விடிய வருமானவரித்துறை சோதனை

அரியலூர் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் அப்பு என்கிற விநாயக வேல். இவர் அரியலூர் மாவட்ட திமுக  மாணவரணியில் நிர்வாகியாக இருந்தார்.  தற்போது அவர் எந்த பொறுப்பிலும் இல்லை .

இந்நிலையில் வருமான வரித்துறை நோடல் ஆபீசர் மனோஜ் குமார் தலைமையிலான மூன்று குழுவினர், அரியலூர் நகரில் புது மார்க்கெட் தெரு மூணாவது சந்தில் உள்ள அப்பு என்கிற விநாயகவேல் வீட்டிலும், அரியலூர் நகர் பெரியார் நகர் மூன்றாவது தெருவில் உள்ள அவரது தந்தை அண்ணாதுரை வீட்டிலும் மற்றும் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள அவரது மாமியார் ராணி வீட்டிலும் நேற்று இரவு முதல்  வருமான வரி சோதனையை நடத்தி வருகின்றனர். விடிய விடிய சோதனை நடந்தது. இன்று காலையிலும் தொடர்ந்து சோதனை நடக்கிறது.
ஒவ்வொரு இடத்திலும் சுமார் ஐந்து பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசாரணையில் அவருக்கு வந்த வருமானங்கள், கடந்த ஆண்டுகளில் அவர் தாக்கல் செய்த வருமான வரி தகவல்கள், அவரின் சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்கள் விசாரிக்கப்படுவதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!