Skip to content

ஏ.சி. சிலிண்டர் வெடித்து இளைஞர் பலி.. தஞ்சையில் பயங்கரம்..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், பகுதியை சேர்ந்த மணிமாறன். இவருடைய வீட்டில் உள்ள ஏ.சி. பழுதானது. இதனையடுத்து  கும்பகோணத்தில் உள்ள தனியார் ஏஜென்சியில் பணியாற்றும் தாராசுரம் பகுதியை சேர்ந்த சேக்லாவுதீன்,24, கணேஷ்,23 ஆகிய இருவரும் மணிமாறன் வீட்டுக்கு சென்று பழுதடைந்த ஏ.சி.யில் உள்ள சிலிண்டரில், கியாஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏ.சி.யில் உள்ள சிலிண்டர் திடீரொன வெடித்தது. இதில் சேக்லாவுதீன், கணேஷ் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த சேக்லாவுதீன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!