புதுக்கோட்டை மாவட்டம் பிடாம்பட்டி சஞ்சீவி ராயர் திருக்கோவில் தேரோட்ட விழா விமர்சையாக நடைபெற்றது. நூற்றக்கணக்கானோர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் திருக்கோவில்

வைகாசி திருவிழா கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து அன்ன வாகனம், கோமாதா வாகனம், மான் வாகனம் குதிரை வாகனம், கிளி வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதி உலா தினமும் நடைபெற்று.
வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சஞ்சீவி ராயர் தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது
நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சஞ்சீவி ராயர் அருள் பெற்று சென்றனர்.
