கேரள மாநிலம் மலாபுரத்தில் விரும்பியது நடக்கும் என கூறி அபு அலவி என்பவர் மந்திரித்த வாழைப்பழம் ஒன்றை ரூ.2,500-க்கு ஏலம் விட்டு இளைஞர் ஒருவரிடம் வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தோலை உரித்தபோது உள்ளே பழம் ஏற்கனவே துண்டுகளாக்கப்பட்டு இருந்த நிலையில், அதை நம்பிய இளைஞர் அப்பழத்தை சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இளைஞர்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டதாக அபு அலவி தங்கியிருந்த வீட்டை உள்ளூர் இளைஞர்கள் அடித்து நொறுக்கியதையடுத்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
