வேலூரில் இருந்து சித்தூருக்கு வைக்கோல் ஏற்றி வந்த சரக்கு வேன், பரதராமி வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது பரதராமி அருகே சாலையில் இருந்த மின்கம்பி வைக்கோலுடன் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் வைக்கோல் திடீரென தீப்பற்றி, சில நொடிகளில் வேன் முழுவதும் தீ பரவியது.
இதைக் கவனித்த ஓட்டுநர் உடனடியாக வேனில் இருந்து கீழே குதித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், வேனும் அதில் இருந்த வைக்கோலும் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்த குடியாத்தம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வேன் முழுவதுமாக எரிந்து சாம்பலானது.இந்த சம்பவம் குறித்து பரதராமி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தால் குடியாத்தம்சித்தூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
