தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளதால், பொதுமக்கள் தற்போது அதிகளவில் ஆவின் பாலை வாங்கி வருவதாக அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே சில பகுதிகளில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இன்று (அக்.7) அளித்த பேட்டியில் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், பொதுமக்கள் அதிகளவில் ஆவின் பாலை நாடி வருவதால், தேவைக்கேற்ப பால் விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஆவின் பால் தட்டுப்பாடு…அமைச்சர் விஜயலட்சுமி விளக்கம்
