சென்னை மாதவரம் கணபதி தோட்டம் பகுதியில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வீட்டில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கில் டீசல் கேன் தவறி விழுந்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயில் சிக்கிய 2 வயது குழந்தை தன்ஷிகாவை மீட்க சென்ற தந்தை அறிவழகனும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தில் தாய் அஞ்சனா அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீப விளக்கில் டீசல் கேன் பட்டு விபத்து.. தந்தை, மகள் பலி
