Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மன்னார்புரம் அருகே விபத்து: முதியவர் பலி

திருச்சி மன்னார்புரம் அருகே இன்று அதிகாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் உடல் சிதைந்து அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து எடமலைப்பட்டி புதூர் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் அளித்த புகாரின் பேரில், தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உயிரிழந்தவர் யார்? விபத்தை ஏற்படுத்திய வாகனம் எது? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!