ஏலகிரி மலைக்குச் சுற்றுலா சென்றுவிட்டு, காரில் திருவண்ணாமலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த அமெரிக்கச் சுற்றுலா பயணிகள் மீது மண்மலை அருகே ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணம் செய்த இரண்டு அமெரிக்க சுற்றுலா பயணிகளும், ஆட்டோ ஓட்டுநரான ஏழுமலையும் பலத்த காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே விபத்து: அமெரிக்க சுற்றுலா பயணிகள் காயம்
