மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்கொள் கொண்டுவரப்பட்டது. மேலும், 2 ஆண்டுகளாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி கடந்த சில நாட்களுக்குமுன் விலக்கிக்கொள்ளப்பட்டது.
அதேவேளை, மணிப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் பாதுகாப்புப்படையினர் இறங்கியுள்ளார்.இந்நிலையில், மணிப்பூரில் இன்று 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அம்மாநிலத்தின் டென்கொபல், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு, கக்சிங் ஆகிய மாவட்டங்களில் பதுங்கி இருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். மேலும், கண்ணிவெடி, பீரங்கி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களையும் பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.

