தமிழகத்தில் பல்வேறு யூடியூபர்கள் ஓட்டல்களுக்கு சென்று உணவின் தரம், ருசி குறித்து ரிவ்யூ செய்து அதை வீடியோவாக எடுத்து தங்கள் யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் வைரலாகி வாடிக்கையாளர்கள் அந்த கடைகளுக்கு செல்கின்றனர். ஆனால், இதுபோன்ற யூடியூபர்கள் மூலம் வைரலாக்கப்படும் ஓட்டல்களில் உணவின் தரம் மோசமாக உள்ளதாகவும், பணத்தை வாங்கிக்கொண்டு யூடியூபர்கள் போலியாக உணவு குறித்து ரிவ்யூ கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
யூடியூப் ரிவ்யூ
இந்நிலையில், ஓட்டல்களில் உணவு ரிவ்யூ செய்யும் யூடியூபர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் முழு விவரம் பின்வருமாறு:-
- உணவு பாதுகாப்புத்துறை வழிகாட்டுதல்களின்படி செயல்படும் ஓட்டல்களுக்கு மட்டுமே யூடியூபர்கள் உணவு ரிவ்யூ செய்ய வேண்டும்.
- ரிவ்யூ செய்யும்முன் ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் உள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும்
- ஓட்டல் ஊழியர்கள், சமையல்காரர்கள் கையுறை, தலையுறை அணிகின்றனரா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- ஓட்டல்களில் உணவு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? என்பதை யூடியூபர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- ஓட்டல்களில் குடிநீர், உணவுகள் தரமான முறையில் தயார் செய்யப்படுகின்றனவா? என்பதை ஆராய வேண்டும்.
- ஓட்டல்களின் வெளித்தோற்றத்தையும், உள்தோற்றத்தையும் மட்டுமே காட்சிப்படுத்தி விளம்பரம் செய்யக்கூடாது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
