Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விபத்தில் சிக்கிய நடிகர் பாலகிருஷ்ணா-முழங்காலில் பலத்த காயம்

விபத்தில் சிக்கிய நடிகர் பாலகிருஷ்ணா-முழங்காலில் பலத்த காயம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலக்கிருஷ்ணா, படப்பிடிப்பு தளத்தில் நடந்த எதிர்பாராத விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

‘NBK 111’ (தற்காலிக தலைப்பு) படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் காக்கினாடா துறைமுகப் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்தப் படத்தை கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். இத்திரைப்படத்திற்காக பிரமாண்டமான ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. வழக்கம் போல எந்தவொரு ஆபத்தான சண்டைக் காட்சிக்கும் ‘டூப்’ போடாமல் தானே நேரடியாக நடிக்கும் பழக்கம் கொண்ட பாலக்கிருஷ்ணா, இக்காட்சியிலும் சுயமாக நடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கால் நழுவி கீழே விழுந்ததில், அவரது முழங்காலில் (Knee) பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டுக் காக்கினாடாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, முழங்கால் காயத்திற்கான தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது பாலக்கிருஷ்ணாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ரசிகர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால், காக்கினாடாவில் நடந்து வந்த ‘NBK 111’ படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!