Skip to content

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடிகர் ஜெயராம் சாமிதரிசனம்

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இன்று
குடும்பத்துடன் சுவாமி தரிசனம். கோவில் யானை மங்கலத்திற்கு பழங்கள் வழங்கினார்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணத்திற்கு வருவது மகிழ்ச்சி என நெகழ்ச்சியுடன் ஜெயராம்

தெரிவித்தார். பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இன்று மாலை கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்திற்கு குடும்பத்துடன் வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயராம்,
தனது அம்மாவின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள செருகுடி தான் .
சிறு வயதில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், சாரங்கபாணி கோவில் ஆகியவற்றிற்கு

அடிக்கடி வந்ததை நினைவு கூர்ந்தார்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை புரிந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என நெகழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து கேட்டதற்கு அவரது பாணியில் சிரிப்பு சிரித்து விட்டு

நகர்ந்தார். பின்னர் கோவில் யானைக்கு பழங்கள் வழங்கினார். கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா எதிர்வரும் டிசம்பர் முதல் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!