Skip to content
Home » நடிகர் கிங்ஸ்லி, நடிகை சங்கீதா திடீர் திருமணம்

நடிகர் கிங்ஸ்லி, நடிகை சங்கீதா திடீர் திருமணம்

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லி, நடிகை சங்கீதா   கிங் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 2018-ம் ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி. குறுகிய காலத்தில் அடுத்தடுத்து ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெய்லர்’ ஆகிய வெற்றிப்படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில்  இடம் பிடித்தார். 46 வயதான இவர், திருமணம் செய்யாமல் இருந்து வந்தார்.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா திருமணம்
இந்நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தோழியாக நடித்த சங்கீதா என்பவருக்கும், ரெடின் கிங்ஸ்லிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண மேடையில் இருவரும் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றும், திருமண கோலத்தில் இருவரும் நிற்கும் புகைப்படம் ஒன்றும் நடிகர் சதீஷ் கிருஷ்ணன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ”திருமண நாள் வாழ்த்துகள். பிளாக் பஸ்டர் வருடமாக இருக்க வாழ்த்துகள். இது சினிமாக்காட்சி அல்ல. நிஜம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!