மாடல் அழகியும் பிரபல நடிகையுமான த்விஷா சர்மா தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். மன அழுத்தத்தால் மருமகள் தற்கொலை செய்துகொண்டதாக, அவரது மாமியாரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங் கூறியிருந்தார். ஆனால், வரதட்சணை கொடுமை செய்ததாக த்விஷாவின் குடும்பத்தினர் புகாரளித்தனர். இதன்பேரில் அவரது கணவரும் வழக்கறிஞருமான சமர்த் சிங் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
