நடிகை பத்மபிரியா தனது 46வது வயதில் தாயாகியுள்ளார். குழந்தையின் முதல் பிறந்தநாளன்று இந்தத் தகவல் வெளியானது. முன்னதாக, தனது கர்ப்பம் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தவில்லை. குழந்தையின் கைகள் இடம்பெற்ற புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்து பத்மபிரியா இத்தகவலைத் தெரிவித்தார். இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், 10 வருடங்களுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது. பத்மபிரியா, தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே, பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
