Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

ஆள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டதாக   கூடுதல் டிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டு  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜெயராம்  தனது சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அதில் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். மேலும் கடத்தலில் நான் நேரடியாக ஈடுபடவில்லை எனவே  சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என முறையிட்டார்.

இது குறித்து  உச்சநீதிமன்ற நீதிபதி, தமிழக அரசின் பதிலை இன்று தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.  அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.  அப்போது  கூடுதல் டிஜிபி ஜெயராம்  சஸ்பெண்டை ரத்து செய்ய முடியாது , விசாரணையை கருத்தில் கொண்டு சஸ்பெண்ட் தொடர வேண்டும்  , அதை திரும்ப  பெற  போவதில்லை என்று  தமிழக அரசின் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில்   தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இந்த விசாரணையை வேறு பிரிவுக்கு மாற்ற வாய்ப்பு உள்ளதா என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

error: Content is protected !!