அதிராம்பட்டினம் காளியம்மன் கோவிலில் ஆடி முளை பாரி கொட்டும் திருவிழா அதிராம்பட்டினம் காந்திநகர் முத்துக்குமாரசாமி ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 20 தினங்களாக விரதம் இருந்து


முளைப்பாரி வளர்த்து காளியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்து அம்மனை கும்பிட்டனர் பின்னர் முளைப்பாரிகளை கடலில் கரைப்பதற்காக அதிராம்பட்டினம் விநாயகர் கோவில் இருந்து பக்தர்கள் முளைப்பாரிகள் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக மெயின் ரோடு பேருந்து நிலைய வளாகம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக காந்திநகர் துறைமுகம் வந்தடைந்தனர். பின்னர் கடல் தேவதையை வணங்கி முளை பாரிகளை படகில் ஏற்றி பெண்கள் ஆர்வத்துடன் முளைப்பாரி கரைப்பதற்கு கடலுக்குச் சென்றனர் .பின்னர் பெண்கள் முளைப்பாரிகளை கடலில் கலந்தனர் இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்
