Skip to content
Home » சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

  • by Senthil

சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான பதிலுரையாற்றி வருகிறார்.  இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பதிலுரை வழங்கவிடாமல் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார். இந்த நிலையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான முதல்-அமைச்சரின் பதிலுரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!