Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பயிர்களுக்கு இடையே முளைக்கும் களை அதிமுக…அதை அகற்ற வேண்டும்- ஸ்டாலின் பேச்சு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி  பேசினார் அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 4 ஆண்டில் 458 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டி உள்ளோம்.  81 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளது.  ஒன்றிய அரசு நிர்ணயித்ததை விட   சன்னரக நெல்லுக்கு கூடுதலாக குவிண்டாலுக்கு ரூ.105 தமிழக அரசு வழங்குகிறது.  திராவிட மாடல் ஆட்சியில் வோண்மை பெருகி உள்ளது. டெல்டா வாகனத்திற்கு மேட்டூரில் இரு ந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. அதற்கு முன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தியாவின் மஞ்சள் நகரமாம்  ஈரோட்டில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்தது பாராட்டுக்கு உரியது.  தமிழ்நாட்டில் சிலர் தோளில் துண்டு போட்டு விவசாயிககளை  ஏமாற்றுகிறார்கள்.  ஆனால் உழவர்களுக்கு பிரச்னை  என்றால் உடனே வந்து நிற்பது திமுக தான்.  உழவர்களை காக்க பல்வேறு திட்டங்களை  செயல்படுத்தி வருகிறோம்.   இன்னும் பல திட்டங்களை செய்வோம்.

வேளாண் சட்டங்களை ஆதரித்து பச்சை துரோகம் செய்தது அதிமுக. பயிர்களுக்கு இடையே முளைக்கும் களை போன்றது அதிமுகஆட்சி. அந்த ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை அதிகரிததது.  அது நாட்டில் இருந்து மொத்தமாக அகற்றப்பட வேண்டும்.  இன்னும் பல திட்டங்கள் வர இருக்கிறது  தமிழ்நாட்டில் மீண்டும் நம்ம திராவிட மாடல்  2.0 ஆட்சி மலரும்.   உழவர்   பெருமக்கள் அவைரும் திராவிட மாடல் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

error: Content is protected !!