தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் முன்னிலையில் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி இன்று 09/02/2025 எடுத்துக் கொண்டனர். இவ் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் ஜூலியஸ் அற்புத ராயன்( வழித்தாள் வசூல்) இராமநாதன்( பணியாளர் மற்றும் சட்டம்,) மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

