சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே சி டி பிரபாகரன் பேட்டியில் கூறியதாவது. 2026-27ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். தமிழக நிதிநிலை அறிக்கை 5 தாக்கல் செய்யப்படும் ,ஆக்ஸ்ட் 6ம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், அதற்குப் பிறகு அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி பேரவை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். மானிய கோரிக்கைகளும் தொடர்ந்து நடத்தப்படும்.
இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் முழு நேரலை இருக்க வேண்டும் என அறிவுறுத்த உள்ளோம். பேரவை தலைவரை கேட்டு விட்டு தான் சட்டமன்ற உறுப்பினர் கைது செய்ய வேண்டும் என்ற விதி இல்லை. சட்டமன்ற உறுப்பினர் பேசிய பேச்சு தமிழக மக்களிடையே வருத்தத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. நியாயமாக நடக்கும் யாரும் இதை சரி என சொல்ல மாட்டார்கள். என்னுடைய கவனத்திற்கு வரும் பட்சத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் எந்த காலத்தில் எடுக்கலாம் என்பது குறித்து நான் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.
என்னிடம் எழுத்து பூர்வமாக புகார் சமர்ப்பிக்கப்பட்டால் சட்ட விதிகளுக்கு உட்பட்ட நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தில் விசாரணை தொடர்கிறது.
சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்து முதலமைச்சர் பதிலை கேட்க வேண்டும் என்பதை தான் முதலமைச்சர் கரூரில் தெரிவித்தார். அதிமுக கொறடா குறித்த அறிவிப்பு பேரவை கூடும்போது அறிவிக்கப்படும். திமுக எம்எல்ஏ மார்க்கண்டேய்ன கைது தொடர்பாக ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம் தெரிவித்துள்ளார். பேரவை அமைப்புக்குள் கைது செய்தால்தான் அனுமதி தேவை. எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது விவரங்களை தூத்துக்குடி எஸ்பி தெரிவித்தார். எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேச்சு குறித்து புகார் வந்தால் நடவடிக்கை குறித்து முடிவு. சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் சைகை காட்டியதில் எந்த விதிமீறலும் இல்லை. முதல்வர் என்னிடம் அனுமதி பெற்றுவிட்டுத்தான் சைகை ெ சய்தார். அதில் தவறு ஏதும் இல்லை என்று இவ்வாறு தெரிவித்தார்.
