மயிலம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியாகின. எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது.
விஜய் எவ்வாறு ஆட்சியமைக்கப்போகிறார் என்ற பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாநிலங்களவை உறுப்பினரான சி.வி. சண்முகம் திடீரென டில்லிக்குப் பயணம் மேற்கொண்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றிருந்த சி.வி. சண்முகம், டில்லியில் குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து, அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
