அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குறித்து அவதூறான மற்றும் பொய்யான கருத்துக்களை பரப்பியதாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அதிமுக தரப்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. BNS பிரிவு 356-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, வரும் அக்.21-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக இன்பதுரை எம்.பி. தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தது அதிமுக
