Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து- அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக ஈரோடு மண்டலம் சமூகவலைதள பிரிவு துணை தலைவர் பசுபதி செந்தில் என்பவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில்,

தலைமறைவாக இருந்த பசுபதி செந்திலை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, பசுபதி செந்தில் கரூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!