Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லாரியில் குக்கரை பதுக்கி வைத்திருந்த அதிமுக … கரூரில் பரபரப்பு

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த குக்கர்கள் பறிமுதல்: பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை.

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரம் மாலை 6:00 மணியுடன் நிறைவடைந்தது. மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிகள்

தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் திவ்யாவைச் சுற்றி சர்ச்சை உருவாகியுள்ளது.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு, மேட்டு திருக்காம்புலியூர் பகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.1000 வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட புலியூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே இருக்கும் தனியார் தோட்டத்திற்குள் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 50க்கும் மேற்பட்ட குக்கர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகளை கண்டவுடன் குக்கர்களை அதே இடத்தில் கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி சென்றனர்.

சம்பவ இடத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து, வாக்காளர்களை கவரும் நோக்கில் பல்வேறு யுக்திகள் பயன்படுத்தப்படுவதாக அதிமுக வேட்பாளரை எதிர்த்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது

error: Content is protected !!