அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு அமைப்புச் செயலாளர் சின்னச்சாமி மற்றும் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன்

ஆகியோர் எம்.ஜி.ஆர், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வடக்கு நகர செயலாளர் கலைராஜா தலைமையில் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி மற்றும் மாவட்ட செயலாளர்

கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், பேரறிஞர் அண்ணா ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
