விஜயபாஸ்கரை திமுக, தவெக, அதிமுக என அனைத்து கட்சிகளும் புறக்கணித்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, “விஜயபாஸ்கரை திமுக பக்கம் அணுக கூட விடமாட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.
அவரை தவெகவும் புறக்கணித்து விட்டது அதிமுகவும் புறக்கணித்துவிட்டது. தற்போது நடுரோட்டில் அனாதையாக விஜயபாஸ்கர் நிற்கிறார். அதுதான் அவரது இன்றைய கதி. ஹலோ BRO..BRO என்று கத்தி விட்டு சென்ற கூச்சலை தான் திருச்சியில் பார்த்தோம். அது ஒரு சினிமா ஷூட்டிங் தான். “ப்ரோ” கட்சி ஆரம்பிக்கும் போது அந்த அண்ணாமலை ”சோ” ஆரம்பிச்சா என்ன? சும்மா பேசினால் கேட்காது ஹலோ சார், ப்ரோ அப்படினு சொன்னா தான் கேட்கும். தமிழ்நாட்டின் அவல குரல் 15 நாட்களிலேயே கேட்கக்கூடிய சூழ்நிலை வந்துவிட்டது. முதலமைச்சர் விஜய்யின் பேச்சு வெறும் காட்டு கூச்சலாக இருந்தது. அவர் கால்-ஷீட் முறையில்தான் செயல்பட்டு வருகிறார். எம்.பி. சீட்டை தாரை வார்த்தது போல தவெக இன்னும் பலவற்றை தாரை வார்க்கும். பாஜகவை விமர்சனம் செய்தால் என்ன நடக்கும் என்பது விஜய்க்கு தெரியும். அதனால்தான் அவர் பாஜகவை விமர்சிக்க மாட்டார். ஆக்கும் சக்தி திமுக…அழிவு சக்தி தவெக” என விமர்சித்தார்.
