Skip to content

மத்திய அரசை கண்டித்து.. அனைத்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்- கைது

கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் மத்திய மோடி அரசு தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கைவிடக் கோரி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் ‍, நூறாண்டு காலமாக போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகள் தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்பை திரும்ப பெற வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் நிர்ணய செய்ய வேண்டும், இன்சூரன்ஸ் , வங்கி

உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை கைவிட வேண்டும், மீண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

44 தொழிலாளர் நல சட்டங்களை அவசரமாக மத்தியில் ஆளக்கூடிய பிஜேபி அரசு இனிமேல். இந்தியாவில் தொழிலாளி என்ற வர்க்கமே இருக்கக் கூடாது தொழிற்சங்கங்கள் இருக்கக்கூடாது என்று 4 சட்ட தொகுப்பாக மாற்றி உள்ளனர். இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கடை அடைப்பு, விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் திருத்த சட்டத்தை திரும்பப்பெறும் வரை போராட்டம் ஓயாது என தெரிவித்தார்.

error: Content is protected !!