திருச்சியில்
டிரைவரிடம் தகராறு செய்து கார், பணம் பறிப்பு
இரண்டு வாலிபர்கள் கைது
திருச்சி ஜூலை 14-
திருவண்ணாமலை கொளக்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (23). இவர் சென்னை சார்ந்த ஒரு சுற்றுலா நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார் இந்த நிலையில் இவர் திருச்சிக்கு பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்தார். அப்போது பயணிகளை டிவிஎஸ் டோல்கேட் அருகே இறக்கி விட்டார் தொடர்ந்து பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி கொண்டு ஏர்போர்ட் திருவளர்ச்சிபட்டி அருகே காரை நிறுத்தி காருக்குள் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த இரண்டு வாலிபர்கள் காரில் இடித்துவிட்டு காரை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றனர் இதுகுறித்து ராஜேஷ் கேட்டபோது அவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு அவரை தாக்கி அவரது கார் மற்றும் அவரிடமிருந்த ரூபாய் 3000 பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர் இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து டிரைவரிடம் பணம் பறித்த புதுக்கோட்டை மாவட்டம் நீர் பழனி பகுதியை சேர்ந்த மதன்குமார் ( 22 )மற்றும் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த ரித்தீஷ் (22) ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் அவர்களுடன் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
திருச்சியில்
கொத்தனார் மகன்
தூக்கிட்டு தற்கொலை
போலீசார் விசாரணை
திருச்சி ஜூலை 14-
திருச்சி உறையூர் நவாப் தோட்டம் பகுதி சேர்ந்தவர் கணேசன் (59). கொத்தனார் இவரது மகன் சக்திவேல் ( 25 ) கூலி வேலை செய்து வந்தார். கடந்த ஐந்து மாதங்களாக சக்திவேல் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தார் இந்த நிலையில் கணேசன் வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது சக்திவேல் வீட்டில் தூக்கிட்டு கொண்டது தெரியவந்தது உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் . அங்கு டாக்டர்கள் சக்திவேல் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
