Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அம்பேத்காருக்கு காவி… இ.ம.க நிர்வாகிக்கு குண்டாஸ்..

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் கடந்த 6-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, அம்பேத்கர் உருவ படத்தில் காவி உடை அணிவித்து விபூதி பூசி, குங்குமம் வைத்து சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கும்பகோணம் மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தியை கைது செய்தனர். இந்த நிலையில் அம்பேத்கரை அவமதித்த வரொட்டி ஒட்டிய வழக்கில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் குருமூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கும்பகோணம் கிளைச்சிறையில் இருந்த அவர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!