Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு -3 பேர் கைது

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு -3 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் , ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆலை உரிமையாளர் மோகன், அவரது சகோதரர் ஜோசப்ஜெகன், மேலாளர் டேனியல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் ஞாயிற்றுக்கிழமை எதிர்பாராதவிதமாக அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், அங்கு பணியில் இருந்த 64 நபர்கள் (60 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே, அமோனியா வாயு கசிவு பதிப்பால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த ஒரு பெண் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேரும், அரசு மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் என 5 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!