Skip to content

கோவை-வால்பாறை அருகே காட்டுயானை தாக்கி மூதாட்டி காயம்…

  • by Authour

கோவை, வால்பாறை அருகே உள்ள ஜெயஸ்ரீ தனியார் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான ஈட்டியார் எஸ்டேட்டில் 12 வீடு கொண்ட லைன் தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் 5வது வீட்டில் அன்னலட்சுமி என்பவர் குடியிருந்து வருகிறார்.நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை குடியிருப்பின் கடைசியில் உள்ள ரேஷன் கடை கதவை உடைத்துள்ளது. அப்போது சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே வந்த மூதாட்டி அன்னலட்சுமியை காட்டு யானை இழுத்து கீழே தள்ளி காலால் மிதித்து பொதுமக்களின் சத்தம் கேட்டு அங்கிருந்து யானை சென்றுவிட்டது யானை தாக்கியதில் மூதாட்டிக்கு இடது காலில் தோல் கிழிந்த நிலையில் ரத்த காயம் ஏற்பட்டது அப்பகுதி பொதுமக்கள் வானத்துறையினருக்கு தகவல் அளித்தின் பேரில் ஆம்புலன்ஸ் இரவு 108 மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு உள் நோயாளியாக வந்து சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் காயம் பட்ட மூதாட்டிட்டுக்கு முதலுதவி சிகிச்சைக்காக வனத்துறை சார்பில் 5000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது, இதனை அடுத்து வனத்துறையினர் யானை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே யாரும் வர வேண்டாம் எனவும் வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் ஆனைமலை புலிகள் காப்பகம் துணைக்கால இயக்குனர் கள இயக்குனர் பார்க்கவ தேஜா அறிவுறுத்தலின்படி மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வாகனங்களில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!