Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அன்புமணி பிறந்தநாள் – திருப்பத்தூரில் 580 மரக்கன்றுகள் நடவு!

58-வது பிறந்தநாளில் 580 மரக்கன்றுகள்! அன்புமணி ராமதாஸுக்காக திருப்பத்தூரில் சிறப்பு நிகழ்ச்சி!பிறந்தநாள் கொண்டாட்டம்! பசுமைக்கு ஒரு பரிசு!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் 58-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சமூக ஊடகப் பேரவை சார்பில் 580 மரக்கன்றுகள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் TK.ராஜா தலைமையில்

சமூக ஊடகப் பேரவையின் மாவட்டத் தலைவர் வெற்றிக்குமார் மற்றும் செயலாளர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏழை, எளிய மக்களுக்கு 580 மரக்கன்றுகளை வழங்கிச் சிறப்பித்தனர்.

மரக்கன்றுகளைப் பெற்று மகிழ்ந்த பொதுமக்கள், அவற்றைத் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நட்டு முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், பசுமையான சூழலை

உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் நிகழ்ச்சியின் நோக்கமாக வலியுறுத்தப்பட்டது.

ஒரே நாளில் 580 மரக்கன்றுகள் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும் பிறந்தநாள் கொண்டாட்டத்தை மரக்கன்றுகள் விநியோகத்துடன் இணைத்து நடத்திய இந்த நிகழ்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது..

மேலும் இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், பொன்னுசாமி, கிருபாகரன்,குட்டிமணி, நிர்மலா ராசா,ஆனந்தன், சேகர், கராத்தே சிவா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!