Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செல்வி உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினர். அப்போது 1993-ல் பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். மே மாதம் கோடை விடுமுறை முழுமையாக வழங்க வேண்டும். சிலிண்டருக்கான முழு தொகையும் பில்லில் உள்ளது போல் வழங்கிட வேண்டும். பிற துறை பணிகளை திணிக்க கூடாது, பணிவரன் முறை அளிக்க வேண்டும், முறையான காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையங்களை சிறிய மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் சிறிய மையங்களை மற்ற மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!