Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அனில் அம்பானி ரிலையன்சின் ரூ.3,034 கோடி சொத்துக்கள் முடக்கம்

அனில் அம்பானி ரிலையன்சின் ரூ.3,034 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான சுமார் 3 ஆயிரத்து 34 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. வங்கி முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கின் விசாரணையில் இதுவரை ரூ.19,344 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நிறுவனத்தின் பெயரில் கடன் பெற்று, சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனில் அம்பானி ரூ.17,000 கோடி பண மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. 

error: Content is protected !!