Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அண்ணாமலை உருவப்படம் எரித்த அதிமுகவினர் 25 பேர் கைது….

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ரவி தலைமையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உருவப்படம் எரிப்பு நடைபெற்றது. அண்மையில் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியது அதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மீன்சுருட்டி பகுதியில் உள்ள அதிமுகவினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படத்தை தீ வைத்து எரிக்க முயற்சி செய்து அண்ணாமலை ஒழிக என கோஷங்கள் எழுப்பியவாறு வந்த நிலையில். மீன்சுருட்டி காவல்துறையினர் உருவ படத்தை கைப்பற்றி சுமார் 25-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!