Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி. அருண்குமாருக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக துடியலூரில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமாருக்கு ஆதாரவாக துடியலூரில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.

அண்ணாமலை பேசும்போது உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கவுண்டம்பாளையத்தில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே உள்ளார் அது நமது பி ஆர் ஜி அருண்குமார் மட்டுமே. தெரியாமல் கவுண்டம்பாளையத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரை நிறுத்திவிட்டனர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய ராகுல் காந்தி அவர்கள் இதுவரை தமிழ்நாட்டிற்கு வரவில்லை. கடந்த பத்து நாட்களுக்கு முன் கேரளாவில் இருந்து கோயம்புத்தூர் வந்தவர் இங்குள்ள வேட்பாளருக்கு வாக்கு கேட்காமல் அப்படியே சென்று விட்டார்.

நரேந்திர மோடி எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்து பி ஆர் ஜி அருண்குமாருக்கு வாக்கு சேகரிக்க நாளை கோவை வருகிறார். கொடிசியா மைதானத்தில் உரையாற்றுகிறார். மத்தியில் மோடி மாநிலத்தில் எடப்பாடி இருவரும் சேர்ந்து ஒரு புதிய சகாப்தத்தை தமிழ்நாட்டில் கொண்டு வர உள்ளனர். நாளை மறுநாள் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளார். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் ராகுல் காந்தியும் ஒரே மேடையில் சந்திக்காமல் நடைபெறக்கூடிய முதல் தேர்தல் இதுதான். இங்கே அண்ணா திமுக தான் வெற்றி பெறப் போகின்றது என்று ராகுல் காந்திக்கு தெரிந்து விட்டது. அதனால் தான் அவர் பிரச்சாரம் செய்யவில்லை.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கீ கொடுக்கும் பொம்மை, துணை முதல்வர் உதயநிதி ஒரு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என விமர்சித்தார். இன்று தமிழ்நாட்டில் ஸ்டாலின் அவரது சகோதரி கனிமொழி அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மட்டுமே பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஸ்டாலின் கோயம்புத்தூரை வஞ்சிக்கிறார். கொரோனா காலத்தில் தடுப்பூசிகளை குறைவாக கொடுத்தார். பாரதிய ஜனதா கட்சி போராடி அதை பெற்றது. கோயம்புத்தூருக்கு எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. அதிமுக காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களையே திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடைக்கிறது என்று கூறி பாலியல் வன்கொடுமை போக்சோ சட்டம் கொலைகள் எவ்வளவு நடந்துள்ளது என பட்டியலிட்டார்.

இந்தியாவிலேயே அதிக கல்லூரிகளைக் கொண்ட மாவட்டம் கோவை மாவட்டம். இதை பயன்படுத்திக் கொண்டு திமுகவினர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை அதிகமாக விற்பனை செய்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கஞ்சா அதிகமாகி உள்ளதற்கு காரணம் எனக் கூறி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் முதலமைச்சர் மு க ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம் பி கனிமொழி ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காண்பித்து தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு புத்தகங்களை சப்ளை செய்யும் நிறுவனம் இந்த ஜாபர் சாதிக்கின் நிறுவனம் தான் கருப்பு பணத்தை வெள்ளையாக்க இது போன்ற செய்கின்றனர் என்றார்.

பெண்கள் சகோதரிகள் பாராளுமன்றத்தில் குரல் ஒழிக்க வேண்டும் என்று 33 சதவீத இட ஒதுக்கீட்டை மசோதாவை கொண்டு வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் தம்மா தும்மா என்று குதிக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சாவி கொடுக்கும் பொம்மை போன்றவர் சாவி கொடுத்தால் ஹிந்தி, ஹிந்தி, டெல்லி டெல்லி மோடி மோடி என கூறிக் கொண்டே இருப்பார். அதேபோல தான் துணை முதலமைச்சர் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை அவர் மோடி தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை எனக் கூறிக் கொண்டே இருக்கிறார். கோவை மாவட்டத்திற்கு மட்டும் செய்த திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார்.

இந்த 33 சதவிகித மசோதாவுக்கு எதிராக திமுக வாக்களித்தால் தாய்மார்களே திராவிட முன்னேற்றக் கழகத்தை மன்னிக்கக் கூடாது தற்போது கோயம்புத்தூருக்கு பத்து ரூபாய் பாலாஜி வந்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் 10 பட்டி போட்டு வைத்திருந்தனர். அதை தேர்தல் ஆணையத்திடம் கூறி அதை எடுக்க வைத்துள்ளோம். பாட்டிலுக்கு பத்து ரூபாய் என எடுத்து 14 ஆயிரத்து 950 கோடி அடித்துள்ளனர். அப்படி கொள்ளையடித்த பணத்தை கொண்டு வந்து தேர்தல் செலவழிக்கின்றனர். அவர்களை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். தமிழகத்தில் டிஜிபி மாத்தியாச்சு தலைமைச் செயலரை மாத்தியாச்சு 23ஆம் தேதி முதலமைச்சரையும் மாத்தி விடுங்கள். எனவே இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பி ஆர் ஜி அருண்குமார் வெற்றி பெறச் செய்து எடப்பாடி முதலமைச்சர் ஆக்குங்கள் எனக் கூறி வாக்கு சேகரித்தார்.

error: Content is protected !!