Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அண்ணாமலை விலகியதால் பாதிப்பில்லை… நயினார் நாகேந்திரன்

பாஜக-வில் இருந்து விலகி தனிக்கட்சி துவக்க போவதாக அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில், தங்கள் கட்சி சித்தாந்தக் கட்சி என்பதால் இதனால் தங்கள் கட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் விலகல் மற்றும் அவரின் தனிக்கட்சி குறித்த அறிவிப்பு பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய நயினார் நாகேந்திரன், பாரதிய ஜனதா கட்சி என்பது தனிநபர்களை மையமாகக் கொண்ட கட்சி அல்ல, இது ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அரசியல் இயக்கம் ஆகும்.

எனவே அண்ணாமலை எங்கள் கட்சியினை விட்டு விலகியதால் கட்சிக்கு எந்தவொரு இழப்போ அல்லது பாதிப்போ ஏற்படாது என கூறினார். பாஜக-வில் பிராந்தியப் பிரச்சனைகளைப் பேச முடியவில்லை என்று அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு தவறானது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சர்வதேச அளவில் எங்குச் சென்றாலும் தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பெருமையைப் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார், எனவே பாஜக எப்போதும் தமிழக மக்கள் மீது மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டு உள்ளார்.

யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அது அவரவர் ஜனநாயக உரிமை. அண்ணாமலை தொடங்கிய இயக்கம் மற்றும் துவங்க உள்ள கட்சி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து நான் கருது சொல்ல முடியாது என்றார்.

error: Content is protected !!