காமன்வெல்த் 2026 போட்டியில் குத்துச்சண்டை மகளிர் 54 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் கனடா வீராங்கணையை சிறப்பான ஆட்டத்தில் வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார். தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பிரீத்தி, இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது வெற்றிக்கு விளையாட்டு ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
